ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

வ.புதுப்பட்டியில் தீண்டாமை சுவரை அகற்றக் கோரி கிராம இளைஞர்கள் மனு

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டியில் உள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி, அக்கிராம இளைஞர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். 

Updated On :

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டியில் உள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி, அக்கிராம இளைஞர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். 
     அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வ. புதுப்பட்டி பேரூராட்சியில் பல்வேறு சமூகத்தினரும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் ஒரே தெருவில் வசித்து வந்தோம். பல ஆண்டுகளாக அவ்வழியாக தொடக்கப் பள்ளிக்கு குழந்தைகள் சென்றுவந்தனர். மேலும், தாழ்த்தப்பட்ட மக்கள் தேர்தலின்போது வாக்களிக்க அப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்று வந்தனர்.
     இந்நிலையில், கடந்த 2010 இல் தெருவின் நடுவே 4 மீட்டர் நீளமும், 7 மீட்டர் உயரமும் கொண்ட சுவர் கட்டப்பட்டது. இதனால், குழந்தைகள் மற்றும் வாக்காளர்கள் பள்ளிக்கு சுமார் 1 கி.மீ. தொலைவு சுற்றியே செல்லவேண்டியுள்ளது. மேலும், கழிப்பறைக்கு பெண்கள் செல்ல முடியவில்லை. 
    இதனால், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இந்த தீண்டாமை சுவரை உடனே அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அதில் குறிப்பிட்டுள்ளனர்.
     மேலும் அவர்கள் கூறுகையில், இது சர்வே எண்ணில் தெருப் பாதை என உள்ளது. ஆனால், வட்டாட்சியர் அதுகுறித்து பதில் தர மறுக்கிறார். இதன் காரணமாக, மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு அளித்துள்ளோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.