விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு பதிவு செய்வதில் தாமதம்: பொதுமக்கள் புகார்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களை விரைவாக பதிவு செய்வதுடன், அலுவலர்கள்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களை விரைவாக பதிவு செய்வதுடன், அலுவலர்கள் கனிவாக நடந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஏராளமானோர் தங்களது குறைகளைத் தீர்க்கக் கோரி மனு அளிக்க வருகின்றனர்.
எனவே, இங்கு பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பதிவு செய்வதற்காக புகார் மனு பதிவு மையம் தொடங்கப்பட்டது. அதில், மனுக்களை பதிய 10 கணினியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை புகார் மனுக்களை பதிவு செய்யும் பணியில் ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. இதற்கு காரணம் கேட்ட பொதுமக்களிடம் அங்கிருந்த ஒரு அலுவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை வெளியேற்றும்படி அந்த அலுவலர் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) உதயகுமாரிடம் பத்திரிகையாளர்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், ஆட்சியர் சம்பந்தப்பட்ட இளநிலை எழுத்தரை அழைத்து, பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதன் காரணமாக, புகார் மனு பதிவு செய்யும் இடத்தில் மேலும் ஒரு மணி நேரம் கால தாமதமானதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே, மனு பதிவு செய்யும் இடத்தில் கனிவாக பேசக்கூடிய, விரைந்து பணிபுரியக் கூடிய எழுத்தர்களை நியமிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

