விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் மேட்டுத் தொட்டியான்குளம் கிராமத்தில் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த இக்கிராமத்தில் சுமார் 1200-க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு சமுதாயக்கூடம் இல்லாததால் குடும்ப விழாக்களான வளைகாப்பு, காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா ஆகியவற்றுக்கு வீதிகளில் பந்தல் அமைத்து நடத்துகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு வெளியூர்களிலிருந்து வரும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் போதுமான தங்குமிடம்,கழிப்பறை, குளியலறை இல்லாமல் தவிப்புக்கு ஆளாகின்றனர்.
குறிப்பாக சிறார்கள், பெண்கள், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியோர் மிகவும் அவதிக்கு ஆளாகின்றனர்.
மேலும் இவ்வித வசதிகளுக்காக பக்கத்து நகரமான அருப்புக்கோட்டையில் அதிக வாடகை கொடுத்து அதிக பொருள் செலவு செய்ய வேண்டிய நெருக்கடிக்கு விழா நடத்துவோர் ஆளாவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த கிராமத்திற்கு சமுதாயக்கூடம் அமைத்துத்தருமாறு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தபோதும் தொடர்ந்து காலதாமதம் செய்துவருவதாக கிராமத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆகவே மேட்டுத்தொட்டியான்குளத்தில் குளியல்தொட்டி,கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய சமுதாயக்கூடம் அமைத்துத்தர வேண்டும் என கிராம மக்கள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஓமனுடனான ஹோர்முஸ் நீரிணை ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும்: ஈரான்

புதிய நிர்வாகிகளால் பாஜக மேலும் உயரும்! புஷ்கர் சிங் தாமி

உக்ரைனில் ஆலையைச் சீரமைக்கும் பணியில் ஆர்சிலர் மிட்டல்!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 17 - நேரலை!
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |


