சிவகாசியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் வைத்திருந்ததாக இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருத்தங்கல் ரயில்நிலையம் அருகே போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தாராம். போலீஸார் அவரது பையை வாங்கி சோதனையிட்ட போது, அதில் மதுபாட்டில்கள் இருந்ததாம். விசாரணையில் அவர் எம்.புதுப்பட்டி ராஜேஸ்(29) என தெரியவந்தது. இது குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந்த 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல மாரனேரி காமராஜர் காலனியில் போலீஸார் ரோந்துப் பணியின் போது, கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவரிடம் போலீஸார் சோதனையிட்ட போது, அவரது பையில் மதுபாட்டில்கள் இருந்ததாம். விசாரணையில் அவர் விளாம்பட்டி வீரபுத்திரன்(61) என தெரியவந்தது. மாரனேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந் 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.