
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பயனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பயனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
சிவகாசி அருகே பெத்துலுபட்டியில் ஜான்பாக்கியம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், கடந்த 13 ஆம் தேதி, பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மருந்து இருந்த அறையை தொழிலாளர்கள் பள்ளபட்டி ஆரோக்கியராஜ் (37), சிவகாந்தி நகர் குமார் மகன் முருகன் (48) ஆகியோர் திறந்தனர். அப்போது மருந்து உராய்வு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அவர்கள் பலத்த காயமடைந்தனர். இருவரும் சிவகாசி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஆரோக்கியராஜ் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
முருகன், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





