ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு புதன்கிழமை சமபந்தி விருந்து நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் மற்றும் பெரிய மாரியம்மன் கோயில் ஆகியவற்றில் சமபந்தி விருந்து நடந்தது. சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமபந்தி விருந்தை தொடங்கி வைத்தார். மேலும் ஆதரவற்ற ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் மு.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.