
பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ்
பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்கக் கோரி பேரவையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருப்பது பற்றி...

எடப்பாடி பழனிசாமி.
பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும் எம்எல்ஏவுமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய அவர், அண்மையில் பால் விலையை அரசு உயர்த்தியது. 3 ரூபாய்தான் உயர்த்தப்பட்டிருக்கிறது. இன்றைக்கு தீவனத்தின் விலை அதிகமாகிவிட்டது. கால்நடை பராமரிப்புச் செலவும் அதிகரித்துவிட்டது.
அரசு அறிவித்த பால் கொள்முதல் விலை உயர்வு போதுமானதல்ல எனக் கூறி பால் உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு லிட்டருக்கு பசும்பால் 50 ரூபாயும், எருமைப் பால் 60 ரூபாயும் உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர்.
எனவே, அவர்களின் கோரிக்கையை பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி, கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்தின் நிதிநிலை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
நிதிநிலைச் சுமையைக் காரணம் காட்டாமல், பால் விலையை முதல்வர் உயர்த்தி வழங்கியிருக்கிறார். முதல்வர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றே மாதங்களில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார்.
Summary
AIADMK General Secretary and MLA Edappadi Palaniswami has urged the government to take steps to further increase the milk procurement price.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






