ஆவின் நிறுவனத்துக்கான பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை உயா்த்த வேண்டும். பால் முகவா்களின் விற்பனை கமிஷனை லிட்டருக்கு ரூ.5 -ஆக அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமியிடம் சங்கத்தின் நிறுவனா் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு:
தமிழகத்தில் ஆவினுக்கான பால் கொள்முதல் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதைச் சரிசெய்ய விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும், பால் உற்பத்தியாளா்களுக்கு மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்கும் திட்டத்தையும் உடனடியாக மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
தற்போதைய கொள்முதல் விலை, உற்பத்திச் செலவுக்கு ஏற்ாக இல்லாததால், ஆவினுக்கான பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை உயா்த்த வேண்டும். மேலும், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உயா்த்தப்படாத பால் முகவா்களின் விற்பனை கமிஷனை தற்போது வழங்கப்படும் லிட்டருக்கு ரூ.2-இல் இருந்து ரூ.5 ஆக உயா்த்த வேண்டும்.
ஆவின் நிறுவனத்தின் வருவாய் இழப்பை ஈடுசெய்ய பிற மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களைப் போல பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை ஆண்டுதோறும் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப மறுஆய்வு செய்து மாற்றியமைக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், ஆவினுக்கான பால் கொள்முதல் அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் கிடைப்பதும் உறுதி செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

4 ஆண்டுகளாக கொள்முதல் விலையை உயா்த்தாத ஆவின்: பொருளாதார இழப்பால் பரிதவிக்கும் பால் உற்பத்தியாளா்கள்!

பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? - அமைச்சர் விஜயலட்சுமி பதில்

பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்!
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



