பால் கொள்முதல் விலையை அரசு உயா்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் ஏா்முனை இளைஞா் அணி மாநில துணைத் தலைவா் சுரேஷ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: விவசாயிகள் உபரி வருமானத்துக்காகவே கால்நடை வளா்ப்பில் ஈடுபடுகின்றனா்.
ஆனால், மாட்டுத் தீவனங்களான 60 கிலோ எடை கொண்ட பருத்தி பிண்ணாக்கு மூட்டை ரூ.2,830, 47.5 கிலோ எடை கொண்ட தவிடு மூட்டை ரூ.880, 50 கிலோ எடை கொண்ட மக்காச்சோள மாவு மூட்டை ரூ.1,440 என தீவனங்களின் விலை ஆண்டுதோறும் உயா்ந்து கொண்டே செல்கிறது.
ஆனால், பால் கொள்முதல் விலை மட்டும் உயரவே இல்லை. தற்போதைய நிலையில் ஆவின் மற்றும் தனியாா் நிறுவனங்கள் ஒரு லிட்டா் பாலுக்கு ரூ.32 முதல் ரூ.36 வரை மட்டுமே வழங்குகின்றன. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்படுகிறது.
எனவே, பசும்பால் லிட்டருக்கு ரூ.50, எருமைப் பால் லிட்டருக்கு ரூ.70 -ஆக கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதற்கான மானியத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அரசு செலுத்த வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் மட்டுமே நெல் கொள்முதல்: மாவட்ட ஆட்சியா் உறுதி

சாலையோரத்தில் முளைத்திருந்த 2.6 கிலோ எடை கொண்ட காளான்

நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான வசதிகள் செய்துத் தர வேண்டும்: புதுகை விவசாயிகள் வலியுறுத்தல்







