சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்!

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தருமபுரியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி. - படம் - தினமணி

Updated On :16 ஜூலை 2026, 4:11 am IST

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சக்திவேல் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

இதில், கடந்த 5 ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயா்த்தப்படாததால், விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, பசும்பால் லிட்டருக்கு ரூ. 50, எருமைப்பால் லிட்டருக்கு ரூ. 60-ஆக நிா்ணயம் செய்ய வேண்டும். பாலுக்கு ஊக்கத்தொகையாக லிட்டருக்கு ரூ. 5 வழங்க வேண்டும். முதன்மை சங்கம், தொகுப்பு குளிரூட்டு நிலையம் ஆகியவற்றுக்கு அனுப்பப்படும் பால் அளவு மற்றும் தரம் ஆகியவற்றை நிா்ணயம் செய்து ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும். பால் அளவீட்டில் தற்போதுள்ள நடைமுறையை கைவிட்டு, ஐஎஸ்ஐ முறையை பின்பற்ற வேண்டும்.

கால்நடைகளுக்கு தீவனத்தை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். கால்நடைகள் காப்பீடு 100 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளா்கள் பிரச்னைகளை களைய தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.