ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் பொதுமக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் ஆகஸ்ட் 21 (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைப்பட்டியில் உள்ள கோட்ட செயற் பொறியாளர் அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை கூட்டம் நடைபெறும்.
இதில் விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.வெண்ணிலா முகாமிட்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிகிறார். இதில் பொது மக்கள் அளிக்கும் மனுக்களில் தெரிவிக்கப்படும் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கோட்ட செயற் பொறியாளர் எம்.சுடலையாடும் பெருமாள் கேட்டுக் கொண்டுள்ளார்.