விருதுநகரில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வட்டாரப் பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நிர்வாகி சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 100 நாள்கள் வேலை என்பதை 200 நாள்களாக உயர்த்த வேண்டும். நாள் ஒன்றுக்கு தொழிலாளர்களுக்கு ரூ. 400 சம்பளம் வழங்க வேண்டும். மேலும், சம்பளம் காலதாமதமின்றி உடனுக்குடன் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சிபிஐ மாவட்டச் செயலாளரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான லிங்கம் கலந்து கொண்டு பேசினார். இதில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









