ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

மு.க.அழகிரியின் பேச்சால் பயனில்லை

கருணாநிதி இருந்த போதே மு.க.அழகிரி திமுகவில் சேர்ந்திருக்க வேண்டும். தற்போது அவர் பேசும் பேச்சால் பயனில்லை என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Updated On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

கருணாநிதி இருந்த போதே மு.க.அழகிரி திமுகவில் சேர்ந்திருக்க வேண்டும். தற்போது அவர் பேசும் பேச்சால் பயனில்லை என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற தனது ஆதரவாளர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சியுடன் இணக்கமான கொள்கையுள்ள கட்சியுடனே கூட்டணி வைப்போம்.
கருணாநிதி இருந்தபோதே மு.க.அழகிரி கட்சிக்குள் மீண்டும் நுழைந்திருக்க வேண்டும். தற்போது காலம் தாழ்த்தி விட்டதால் கட்சியில் இல்லாத மு.க.அழகிரியின் பேச்சால் பயனில்லை.
இந்தியா காவி மயமாவதைத் தடுப்போம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக ஏற்கெனவே இரண்டுமுறை பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டதால் அதைப்பற்றிப் பேச அவருக்கு அருகதையில்லை. சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி. உள்ளிட்டோருக்கு பாராட்டு விழா நடத்த நினைக்காத தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, இலங்கைத் தமிழர் படுகொலைக்குக் காரணமான ராஜபட்சவுக்குப் பாராட்டு விழா நடத்தக் கூறியிருப்பது வெட்கக் கேடான விஷயம் என்றார்.
 இதே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ராதாரவியிடம், கருணாநிதி நினைவாக செப்.5 இல் சென்னையில் மு.க.அழகிரி, மெளன அஞ்சலி மற்றும் பேரணி நடத்துவது குறித்துக் கேட்டதற்கு, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அமைதிப் பேரணி நடத்தலாம். அதுபற்றி தான் கருத்துக் கூற இயலாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.