அனுப்பன்குளத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
சிவகாசி ஊராட்சி ஒன்றியம் அனுப்பன்குளம் ஊராட்சியில் புதன்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
சிவகாசி ஊராட்சி ஒன்றியம் அனுப்பன்குளம் ஊராட்சியில் புதன்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமை வகித்தார். இதில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு, 46 பயளாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட ரூ.6.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப்பேசியதாவது: பட்டாசு ஆலை பிரச்னை பற்றி இப்பகுதி மக்கள் என்னிடம் கூறினார்கள். பட்டாசு ஆலை உரிமையாளர்களை கடந்த திங்கள்கிழமை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்திக்க வைத்தேன். அவர்கள் முதல்வரிடம் பிரச்னைகளை கூறியுள்ளார்கள். தொழிலாளர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. நிச்சயம் இந்த பிரச்னைக்கு நல்ல முடிவு வரும். பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






