திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

அரசு பள்ளிகளுக்கு  கல்வி விளக்கப்படம் வழங்கல்

சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரி சார்பில் செவ்வாய்க்கிழமை அரசு பள்ளிகளுக்கு கல்வி

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரி சார்பில் செவ்வாய்க்கிழமை அரசு பள்ளிகளுக்கு கல்வி விளக்கப்படங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வழங்கினார்.
   கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களிடம் நிதி திரட்டி கல்வி தொடர்பான உதவிகளை அக்கல்லூரி நிர்வாகம்  ஆண்டுதோறும் செய்து வருகிறது. இந்த ஆண்டு ரூ. 3 லட்சம் நிதி திரட்டப்பட்டது. இந்த நிதியில், அறிவியல் கண்டுபிடிப்பு, உலகத் தலைவர்கள், ஏழு அதிசயங்கள், இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள், யோகா, உடற்பயிற்சி , காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட 1182  கல்வி விளக்கப்படங்கள் ரூ. 2,94,355- க்கு வாங்கப்பட்டன. இந்த கல்வி  விளக்கப்படங்களை 12 அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ்.அறிவழகன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர்கள் சி.உத்ரநாராயணன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.