
சந்திரகிரிபுரத்தில் சேவை மைய அலுவலகத்தை திறக்கக் கோரிக்கை
விருதுநகர் அருகேயுள்ள சந்திரகிரிபுரத்தில், ரூ.14.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சேவை மைய அலுவலகக் கட்டடத்தை
விருதுநகர் அருகேயுள்ள சந்திரகிரிபுரத்தில், ரூ.14.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சேவை மைய அலுவலகக் கட்டடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 450 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் சேவை மைய அலுவலகம் கட்டுவதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் இச்சேவை மைய கட்டடம் கட்டப்பட்டது. இதில், கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எளிதாக அனைத்து விதமான சான்றிதழ்களையும் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட் டது. இதனால், கிராமப் பகுதியை சேர்ந்தோர் வருவாய், ஜாதி, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிகழ்களையும் பெற நகர் பகுதிக்கு சென்று தனியார் கணிணி மையத்தில் கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான சேவை மைய அலுவலகத்தில் கணிணி, நெட் வசதி ஏதும் செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால், இந்த மையங்களில் எந்தவித சான்றிதழ்களும் பெற முடியாத சூழ்நிலை உள்ளது. அதிலும் விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரிபுரத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ.14.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சேவை மைய அலுவலகம் திறக்கப்படாமல் வெறும் காட்சி பொருளாக உள்ளது. எனவே, இதை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





