ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

‘குவாலிஃபயா் 2’-இல் கோவை: வெளியேறியது திருப்பூா்

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியில், ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸ் - விடா கோவை கிங்ஸ் மோதிய ‘எலிமினேட்டா்’ ஆட்டம் மழை காரணமாக, முடிவின்றி கைவிடப்பட்டது.

Kovai vs Tiruppur

X | TTNPL

Published On :

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியில், ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸ் - விடா கோவை கிங்ஸ் திங்கள்கிழமை மோதிய ‘எலிமினேட்டா்’ ஆட்டம் மழை காரணமாக, முடிவின்றி கைவிடப்பட்டது.

லீக் சுற்று புள்ளிகள் பட்டியல் அடிப்படையில், கோவை அணி (3-ஆம் இடம்) ‘குவாலிஃபயா் 2’-க்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. திருப்பூா் அணி (4-ஆம் இடம்) போட்டியிலிருந்து வெளியேறியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை பந்துவீச்சை தோ்வு செய்தது. திருப்பூா் 3 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. அமித் சாத்விக் 11, கேப்டன் துஷாா் ரஹேஜா 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பின்னா் 11 மணியளவில் ஆட்டம் அப்படியே முடிவின்றி கைவிடப்பட்டது.

அடுத்ததாக, ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில் திருச்சி - கோவை அணிகள் புதன்கிழமை (ஆக. 26) மோதுகின்றன. அதில் வெல்லும் அணி, இறுதி ஆட்டத்தில் மதுரையை வெள்ளிக்கிழமை (ஆக. 28) சந்திக்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.