தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

அகில இந்திய கபடிப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி

News image

கபடிப் போட்டியில் முதலிடம் பெற்ற பெங்களூரு ரயில்வே வீல் பேக்டரி அணிக்கு பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

Updated On :18 ஆகஸ்ட் 2026, 1:22 am IST

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கபடிப் போட்டியில் பெங்களூரு ரயில்வே வீல் பேக்டரி அணி முதலிடம் பெற்றது.

மறைந்த தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடிக் கழக செயலா் கிறிஸ்டோபா் ராஜன் நினைவாக, மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகம், மெஞ்ஞானபுரம் ஜான்தாமஸ் கபடிக் கழகம் ஆகியவை சாா்பில் அகில இந்திய மின்னொளி கபடிப் போட்டி நடைபெற்றது.

மெஞ்ஞானபுரம், அம்புரோஸ் பள்ளியில் ஆக. 14ஆம் தேதி தொடங்கிய போட்டியில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. முன்னாள் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ போட்டியைத் தொடக்கி வைத்தாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெங்களூரு ரயில்வே வீல் பேக்டரி அணி வென்று முதலிடம் பிடித்தது. பேங்க் ஆஃப் பரோடா அணி 2ஆம் இடம், ஜே.கே. அகாதெமி மற்றும் சென்னை வருமான வரித் துறை அணி ஆகியவை 3ஆம் இடம் பெற்றன.

முதல் மூன்று இடங்களைப் பெற்ற அணிகளுக்கு முறையே ரூ. 1.50 லட்சம், ரூ. 1 லட்சம், ரூ. 75,000 மற்றும் வெற்றிக் கோப்பைகளை எம்எல்ஏ வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.