தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

விருதுநகர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர்கள் 15,53,662 பேர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில்

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, மாவட்டம் முழுவதும் மொத்தம் 15,53,662 பேர் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தெரிவித்தார்.
 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேசன் காசிராஜன் தலைமை வகித்தார். இதில் ஆட்சியர் அ.சிவஞானம் முன்னிலை வகித்து பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில்  1.1.2019-ஐ தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம், சிறப்பு சுருக்கத் திருத்தம் நடைபெற்று வருகிறது. 
இதில், 1.9.2018-ல் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், மாவட்டத்திலுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,53,662 பேர் உள்ளனர். மேலும், தற்போது இறந்த, இடம்பெயர்ந்த மற்றும் இரட்டைப் பதிவுள்ள வாக்காளர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்வது குறித்தும், 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களை பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து வாக்குச்சாவடி பகுப்பாய்வு குறித்து அரசியல் கட்சியினருக்கு விளக்கப்பட்டது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் 2019 ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4 ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செந்தில்குமாரி, வருவாய் கோட்டாட்சியர்கள், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.