வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

ராஜபாளையத்தில் மணிமேகலை மன்ற ஆண்டு விழா

ராஜபாளையத்தில் மணிமேகலை மன்றத்தின் 60 ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2018, 6:38 am IST

ராஜபாளையத்தில் மணிமேகலை மன்றத்தின் 60 ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மன்றத்தின் நிர்வாகி கோபால்சாமி தலைமை வகித்தார். மணிமேகலை மன்றத்தின் 60 ஆம் ஆண்டு விழா மலரை டாக்டர் கணேசன் வெளியிட அதனை ராம்கோ குழும மேலாளர் ராஜ்குமார்  பெற்றுக் கொண்டார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன் கலந்து கொண்டு பேசியது: ஒரு அமைப்பை நடத்துவது என்பது சாதாரணமான காரியமல்ல. அதுவும் 60 ஆண்டு காலம் நடத்தி மணிவிழா காண்பது என்பது மிகவும் பாராட்டத்தக்கது. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஜெயகாந்தன் என பல்வேறு இலக்கியவாதிகள் ஏறிய மேடை இது. மேலும் விடுதலைப் போராட்டத்தில் ராஜபாளையத்தின் பங்கு மகத்தானது என்றார். மேலும் பி.எஸ். குமாரசாமி ராஜா, அரங்கசாமி ராஜாவை பற்றியும், கோதண்டம் ஆகியோரையும்  சிறப்பித்தும் பாராட்டினார்.
மேலும் ஆறு தமிழ் எழுத்தாளர்களுக்கு ரூ.5000 வீதம் விருது அளிக்கப்பட்டது. மேலும் 12 எழுத்தாளர்களுக்கு பாராட்டு விருது வழங்கியும்,  8 இலக்கிய சிற்றிதழ்களுக்கு பாராட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. முன்னதாக தலைவர் கோ.மா.கோதண்டம் வரவேற்றார். வி.கே.பீமராஜா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை குறளமுதன்  செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.