டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சாத்தூரில் இன்று அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம்

சாத்தூரில், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:47 am

DIN

சாத்தூரில், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் திருவள்ளுவன் கூறியிருப்பதாவது:
  தொழிலாளர் நலத்துறை சார்பாக மாவட்டந்தோறும் தொழிலாளர்அலுவலர்  (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் மூலம் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களின் செயல்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  அதனடிப்படையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் கீழ் கொத்தனார்,  பிளம்பர், சித்தாள் உள்பட 53 தொழில் செய்துவரும் தொழிலாளர்கள் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்திலும், தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் கீழ் உடலுழைப்பு தொழிலாளர்களான பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில், தையல், சலவை, பொற்கொல்லர், மண்பாண்டம், விசைத்தறி, சமையல், தெரு வியாபாரம், ஆட்டோ உட்பட 60-க்கும் மேற்பட்ட தொழில்கள் செய்து வரும் தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். 
  நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு இவ்வாரியங்கள் மூலம் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடி உதவித்தொகை, ஓய்வூதியம், இயற்கை மற்றும் விபத்து மரண உதவித்தொகை மற்றும் விபத்து ஊனத் தொகை போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 
   அதன் அடிப்படையில்  தொழிலாளர்கள் தங்களை நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யும் வகையில்  வியாழக்கிழமை சாத்தூர் மேட்டமலை கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.  இதுவரை நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்யாத கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா உடலுழைப்புத் தொழிலாளர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களை உறுப்பினராக பதிவு செய்து பயன் பெற வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.