புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மிளகாய் விலை சரிவால் விவசாயிகள் கவலை

ராஜபாளையம் பகுதியில் மிளகாய் விளைச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:10 pm

DIN

ராஜபாளையம் பகுதியில் மிளகாய் விளைச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர், எஸ்.ராமலிங்காபுரம், நல்லமநாயக்கன்பட்டி, வெங்காநல்லூர், மொட்டமலை, சத்திரப்பட்டி, குறிச்சியார்பட்டி, சுந்தரராஜபுரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் அதிகளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பல்வேறு மாவட்டங்களில் மிளகாய் விளைச்சல் அதிகரித்ததுடன் வரத்தும் பெருகியுள்ளது.இதனால் விலை சரியத் துவங்கியது. 
 இந்நிலையில் ராஜபாளையம் பகுதியில் மிளகாய் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. கிலோ ரூ. 6 முதல் விலை உள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
மிளகாய் பறிப்பு கூலி, சந்தைக்கு கொண்டு செல்ல கூலிக்கு கூட விலை கிடைக்கவில்லை. இதே நிலை நீடித்தால் செடியிலே பழுக்க விட வேண்டியது தான் என மிளகாய் சாகுபடி விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.