அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் புறக்கணிக்கப்படும் அமீர்பாளையம்
சாத்தூரில் உள்ள அமீர்பாளையத்தில் கழிப்பறை, வாய்க்கால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


சாத்தூரில் உள்ள அமீர்பாளையத்தில் கழிப்பறை, வாய்க்கால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சாத்தூர் ஒன்றியம் சத்திரபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது அமீர்பாளையம். இங்குள்ள கருப்பசாமி கோயில் தெரு, நம்பிராஜபுரம், ஏஜிசபை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாய்க்கால் வசதி கிடையாது. இதனால் சுமார் மூன்று
ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்பு அருகே கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுநீரை அகற்றி வாய்க்கால் அமைக்கக் கோரி பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாய்க்கால் இல்லாததால் குடியிருப்புக்கு அருகே கழிவுநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. மேலும் அமீர்பாளையம் உள்ள கிராமத்தை கடந்து தான் சாத்தூர் நகருக்குள் செல்ல முடியும். அவ்வாறு சாத்தூர் நகருக்குள் வரும் அதிகாரிகள் இதை கடந்து சென்றாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள், சாலை வசதி, சுகாதார வளாகம் இல்லாததால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முருகன் கூறுகையில், அமீர்பாளையம் பகுதியில் எவ்வித அடிப்படை வசிகளும் கிடையாது. பஞ்சாயத்து நிர்வாகம் அமீர்பாளையம் பகுதியை புறக்கணித்து வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...