பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பி.எஸ்.குமாரசாமி ராஜா பிறந்தநாள்

சென்னை மாகாண முன்னாள் பிரதமரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநரும், ராஜபாளையம் காந்தி கலை மன்ற நிறுவனருமான

News image
Updated On :9 ஜூலை 2018, 1:26 am

DIN

சென்னை மாகாண முன்னாள் பிரதமரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநரும், ராஜபாளையம் காந்தி கலை மன்ற நிறுவனருமான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் 120 ஆவது பிறந்தநாள் விழா ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ராஜபாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ராஜபாளையம் காந்தி கலைமன்ற அறங்காவலர்கள் என்.கே. ஸ்ரீகண்டன்ராஜா, பி.ஏ.பி. ராஜூ , பி.ஆர்.குமாரசாமி ராஜா முன்னிலையில் பெரியோர்கள், நகர் பிரமுகர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மாலையில் மதுரை தியாகராஜர் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் மு. அருணகிரி தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து காந்தி கலை மன்றம் பி.எஸ்.கே. ருக்மணியம்மாள் கலையரங்கில் நடந்த விழாவில் "வாழ்வாங்கு வாழ்வோம்' என்ற தலைப்பில் சென்னை இசைக்கவி ரமணனின் சொற்பொழிவு நடைபெற்றது.  காந்தி கலை மன்ற அறங்காவலர் பி.ஜெ.ராம்குமார் ராஜா வரவேற்றார். விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.