பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனு 4-வது முறையாக நிராகரிப்பு

பாலியல் பேர வழக்கில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, 4-வது முறையாக ஜாமீன் கோரி தாக்கல் 

Updated On :7 ஜூன் 2018, 7:11 am IST

பாலியல் பேர வழக்கில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, 4-வது முறையாக ஜாமீன் கோரி தாக்கல் 
செய்த மனுவை, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
அருப்புக்கோட்டை தனியார் கலை அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை உதவிப் பேராசிரியையாக இருந்தவர் நிர்மலாதேவி (50). இவர், மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக கைது செய்யப்பட்டார். மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விடுமுறை கால அமர்வு நீதிமன்றத்தில் ஏற்கெனவே மூன்று முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
 விடுமுறை முடிந்து வழக்கமான நீதிமன்றங்கள் செயல்பட தொடங்கியதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 4-வது முறையாக நிர்மலாதேவி  மனு தாக்கல் செய்தார். இந்த மனு, அமர்வு நீதிபதி ஆ.முத்துசாரதா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி போலீஸார் தரப்பில், நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
 இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.