மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

"மாற்றுத் திறனாளிகள் இலவசப் பேருந்து  அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்'

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் இலவசப் பேருந்து அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Updated On :29 மார்ச் 2018, 9:17 pm

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் இலவசப் பேருந்து அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
      இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவசப் பேருந்து அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், கை, கால் பாதிக்கப்பட் டோர், செவித்திறன் குறைபாடுடையோர், மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பேருந்து அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. 
    எனவே, நிகழாண்டு இலவசப் பேருந்து பயணச் சலுகை அட்டை பெற விரும்புவோர், விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் திரும்ப வழங்கவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.