சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

அனைவருக்கும் உயர் கல்வி அவசியம்: நீதிபதி

தற்கால சூழ்நிலையில் அனைவருக்கும் உயர் கல்வி அவசியம் என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.எம்.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். 

Updated On :29 மார்ச் 2018, 9:16 pm

தற்கால சூழ்நிலையில் அனைவருக்கும் உயர் கல்வி அவசியம் என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.எம்.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். 
      சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் வியாழக்கிழமை 14 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தாளாளர் ஏ.பி. செல்வராஜன் தலைமை வகித்தார். இதில், மொத்தம் 849 மாணவர்களுக்குப் பட்டம் வழங்கி வேலுமணி பேசியதாவது:
     கல்வி ஒன்றே விலை மதிக்க முடியாத சொத்தாகும். கல்வி கற்றவர்களுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு. தற்போது இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் உயர் கல்வி கற்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். மேலும், அனைத்துத் துறையிலும் புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதை தெரிந்துகொள்ள உயர் கல்வி அவசியம்.
     ஆறு முதல் பதினாறு வயது வரை குழந்தைகள் கண்டிப்பாக கல்வி கற்கவேண்டும். அது அவர்களது அடிப்படை 
உரிமை. இலக்கை நிர்ணயித்து முன்னேறினால் வெற்றி பெறலாம் என்றார்.
     முன்னதாக, முதல்வர் சீ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். துணை முதல்வர் பெ.கி. பாலமுருகன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.