அருப்புக்கோட்டை நகராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் 3 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.
அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. தினந்தோறும் நகராட்சிப் பகுதி மக்களுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர்த் தேவை என்பதால், திருப்புவனம் ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூலமும், தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமும் சுமார் 25 லட்சம் லிட்டர் குடிநீரே பெறப்பட்டு வந்தது. இதனால், குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்தது.
பின்னர், குடிநீர்ஆதாரங்களிலிருந்தும் அதிகளவில் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, பெறப்போகும் கூடுதல் நீருக்காக தலா 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டன . அதன்படி, அருப்புக்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம், நகர் காவல் அலுவலகம், புளியம்பட்டி காந்தி திடல் ஆகிய பகுதிகளில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டன.
ஆனால், இவை கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் பயன்பாட்டிக்கு இன்னும் கொண்டு வரப்படவில்லை. இதனால், 2 வாரங்களுக்கு ஒரு முறை என குடிநீர் விநியோகிப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, இந்த 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளையும் உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிங்கீதம் சீனிவாச ராவ் படத்தின் டீசர்!

ஜடேஜா சாதனையை சமன்செய்த கே.எல். ராகுல்..! அடுத்து தோனி சாதனைதான்!

நீட்.. ஆடைக்கட்டுப்பாட்டில் புதிய மாற்றம்!
குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

