சாத்தூர் பேருந்து நிலையத்தில் பூட்டி கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்க பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக மின்விசிறி, இருக்கை வசதிகொண்ட அறை தமிழக அரசால் திறக்கப்பட்டது. சாத்தூர் பேருந்து நிலையத்திலும் நகராட்சி சார்பில் திறக்கப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறை தற்போது பூட்டியே கிடக்கிறது.
இதனால் பேருந்து நிலையத்துக்கு வரும் தாய்மார்கள் சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்துசமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சாத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையின் சாவி, சாத்தூர் போக்குவரத்து பணிமனை பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெரும்பாலான நேரங்களில் அறையை பூட்டி வைத்து விடுகின்றனர். இதனால், பேருந்து நிலையத்தில் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, சாத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், தாய்மார்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடு ஆராய்ச்சி மையத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் 200 அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சுகாதாரத் துறை கொள்முதல் முறைகேடு வழக்கில் முன்னாள் சுகாதார சேவைகள் அதிகாரிக்கு பிணை

காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் திருப்பாவாடை உற்சவம்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


