ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் நகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆறாம்மைல் நீர்தேக்கத்திற்கு அய்யனார்கோயில் ஆற்றில் தடுப்பணை அமைத்து நீர் தேக்கப்படுகிறது. இதனால் கண்மாய்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது நீர்தேக்கம் அமைக்கப்பட்டது. இதற்கு அய்யனார் ஆற்றின் வடக்கு பகுதியிலிருந்து வரும் மலட்டாறு நீர் பாதையில் தடுப்பணை கட்டி தண்ணீர் திருப்பி விடப்பட்டது. இதனால் கண்மாய்களுக்கு நீர்வரத்தின்றி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க ராஜபாளையம் நகர தலைவர் முருகேசன் கூறுகையில், முதல் நீர் தேக்கத்திற்காக தடுப்பணை கட்டியதால் ஏற்கனவே பாதிக்கப்பட்டோம். சில ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது நீர் தேக்கத்திற்கு புதிதாக தடுப்பணை அமைத்ததால் நெல் விவசாயம் குறைந்ததுடன் 6 கி. மீ. சுற்றளவில் தென்னை, மா உள்ளிட்ட மரங்கள் பட்டுப்போகின. இரண்டாவது நீர் தேக்கத்திற்கான தடுப்பணையை அகற்ற வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக பிரசாரம்; திருச்சி வந்தடைந்த விஜய்! | TVK

இந்த வாரம் கலாரசிகன் - 19-04-2026
சட்டப்பேரவையில் விசில் அடிக்க முடியாது: திருமாவளவன்

தே. ஜ. கூட்டணிக்கு ஆதரவாக நாளை கோவையில் சந்திரபாபு நாயுடு பிரசாரம்!
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

