திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் 14 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 3 எம்எல்ஏக்கள் உள்பட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 484 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தர்னா போராட்டத்தில் ஈடுபட் டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இதனைக் கண்டித்து விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த 32 பேரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல், மல்லாங்கிணறில் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரையும், அருப்புக்கோட்டையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
ராஜபாளையம்: ராஜபாளையம் காந்திசிலை ரவுண்டானாவில் நடந்த மறியல் போராட்டத்திற்கு நகர திமுக செயலாளர் ராமமூர்த்தி தலைமைவகித்தார். திமுக நிர்வாகி சுமதி ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, நரிக்குடி, திருத்தங்கல், சிவகாசி என 14 இடங்களில் மறியல் போராட்டத் தில் ஈடுபட்ட 3 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட 484 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைவு! எவ்வளவு தெரியுமா?

காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!
அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! ஸ்பீக்கர் ஒலிக்குத் தடை! முக்கிய அறிவிப்பு

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அவையில் விவாதிக்க வேண்டும்! திருச்சி சிவா
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


