அருப்புக்கோட்டைக்கு வந்த அதிமுக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணியில் சுமார் 1200 தொண்டர்கள் பங்கேற்றனர். அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள்
ஆர்.பி.உதயக்குமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர், 111 பயனாளிகளுக்கு ரூ.61.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர். விழா முடிவில், அருப்புக்கோட்டையில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி "ரூ.404 கோடியில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களை இணைத்து சிறப்புக் குடிநீர்த் திட்டம் தயாராகி வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில், எம்.பி., டி.ராதாகிருஷ்ணன், அருப்புக்கோட்டை அதிமுக நகரச் செயலாளர் கண்ணன், ஒன்றியச் செயலாளர் போடம்பட்டி சங்கரலிங்கம், முன்னாள் தொகுதிச் செயலாளர் முத்துராஜா, அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

