ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரதவீதியில் இரண்டு நாள் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Updated On :3 செப்டம்பர் 2018, 12:47 am

ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரதவீதியில் இரண்டு நாள் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து இக்கண்காட்சியை நடத்துகின்றன. விழாவுக்கு தமுஎகச கிளைத் தலைவர் 
கோ.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். 
முதல் புத்தக விற்பனையை திரைப்பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் தொடங்கி வைத்தார். விழாவில் எழுத்தாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் 
அ.லட்சுமிகாந்தன், கவிஞர் நந்தன் கனகராஜ் ஆகியோர் பேசினர். மதுரை பாண்டி பாடல்களை பாடினார். 
இந்நிகழ்ச்சியில் தமாகா விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் க.துள்ளுக்குட்டி, மம்சாபுரம் ரா.தர்மர், வழக்குரைஞர் சி.அன்னக்கொடி,  பி.இருளப்பன், மு.மேகலா, கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
முன்னகாக தமுஎகச செயலாளர் சு.நித்தியானந்தம் வரவேற்றார். திங்கள்கிழமையுடன் இக்கண்காட்சி  நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.