தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

ஓய்வு பெற்ற தமிழாசிரியருக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருது

ஸ்ரீவில்லிபுத்தூர், கிரீன் சிட்டி சுழற் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் புலவர் செ.பாலகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

ஸ்ரீவில்லிபுத்தூர், கிரீன் சிட்டி சுழற் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் புலவர் செ.பாலகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் புதன்கிழமை ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இதற்கு சுழற் சங்கத் தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். கல்லூயின் செயலாளர் ஆர்.ஏ.திலீபன்ராஜா முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தமிழாசிரியரும், தற்போது இக் கல்லூரியில் மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வரும் புலவர் செ.பாலகிருஷ்ணனின் 55 ஆண்டு கல்வி, சமூக மற்றும் ஆன்மிக சேவையைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது சுழற் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.
மேலும் கல்லூரியின் முதல்வர் பி.மல்லப்பராஜின் கல்வி சேவை, ஆளுமைத் திறன் மற்றும் தலைமைப் பண்பினைப் பாராட்டி சிறந்த கல்வியாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை தொகுதியின் எம்.எல்.ஏ. மு.சந்திரபிரபா முத்தையா வழங்கினார். நிகழ்ச்சியில் சுழற் சங்கத்தின் முன்னாள் துணை ஆளுநர் கே.லட்சுமி நாராயணன்,  செயலாளர் சண்முகநாதன், கல்லூரி பேராசிரியர் எம்.மாரியப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கே.வினோத்குமார் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.