விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியில் மேலாளரை கண்டித்து துப்புரவுத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
திருத்தங்கல் நகராட்சியில் பணியாற்றி வந்த துப்புரவுத் தொழிலாளர் ராமர் நோய்வாய்ப்பட்டு கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவரது குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய சம்பளம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க நகராட்சி மேலாளர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என துப்புரவு தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தற்காலிக துப்புரவுப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து நடவடிக்கை எடுக்கத் தவறிய நகராட்சி மேலாளரைக் கண்டித்து நிரந்தர மற்றும் தற்காலிக துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த நகராட்சி ஆணையாளர் சுவாமிநாதன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!

ரக்ஷன் நாயகனாக நடிக்கும் மேரி கோல்ட்! படப்பிடிப்பு தொடக்கம்!

சென்னை எழும்பூர் - சேலம் ரயில் சேவையில் இன்று மாற்றம்! நாளை காலை புறப்படும்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தோல்விக்கு காரணம் ராகுல் காந்தி: பாஜக
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


