
இளைஞருக்கு கத்திக் குத்து: தம்பதி மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதன்கிழமை இளைஞரை கத்தியால் குத்தியதாக தம்பதி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதன்கிழமை இளைஞரை கத்தியால் குத்தியதாக தம்பதி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
டி.மானகேசரி, ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சுப்புராஜ் (20). இவரும் இதே இடத்தைச் சேர்ந்த அ.குமார்-துரைச்செல்வி தம்பதியினரின் மகள் ராமலட்சுமியும் நட்பாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை ராமலட்சுமியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த சுப்புராஜை, ராமலட்சுமியின் பெற்றோர் வழிமறித்து கத்தியால் குத்தி, கம்பால் அடித்து காயப்படுத்தினராம்.
இதில் காயமடைந்த சுப்புராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் குமார், துரைச்செல்வி மீது மல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






