16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

கோவிலாங்குளம் நியாயவிலைக் கடை சீரமைக்கப்படுமா?

அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தில் உள்ள நியாயவிலைக் கடை கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

Published On :

அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தில் உள்ள நியாயவிலைக் கடை கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 அருப்புக்கோட்டை - காரியாபட்டி செல்லும் சாலையில் கோவிலாங்குளம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில், கோவிலாங்குளம் நியாயவிலைக் கடை மற்றும் பெரிய கரிசல்குளம் நியாயவிலைக் கடை முதலானவை உள்ளன.
இதில் பெரிய கரிசல்குளம் நியாய விலைக் கடையில் 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், தங்களுக்கு தேவையான அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வாங்கிச் செல்வது வழக்கம். 
இந்நிலையில் இக்கடையின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டுச் சுவர் விரிசல் ஏற்பட்டு பழுதடைந்து காணப்படுகிறது. மேலும், சிமெண்ட் பூச்சுகளும் அவ்வப்போது, உடைந்து கீழே விழுகிறது. 
இதனால், நியாயவிலைக் கடைக்கு பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் நிலையுள்ளது. மேலும், இக்கட்டடடம் பழுதடைந்தது குறித்து ஏற்கெனவே கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஆனால், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
எனவே, சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடையில் விபத்து ஏற்படுவதற்கு முன்னர், அக்கடையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.