பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

மணப்பெண்ணை படம் எடுத்தவர்களை கண்டித்த உறவினர் அடித்து கொலை

நரிக்குடி  அருகே பிள்ளையார்குளத்தில் புதன்கிழமை இரவு திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த மணப்பெண்ணை படம்  எடுத்தவர்களை

Published On :

நரிக்குடி  அருகே பிள்ளையார்குளத்தில் புதன்கிழமை இரவு திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த மணப்பெண்ணை படம்  எடுத்தவர்களை கண்டித்த உறவினரை அடித்து கொலை செய்த 7 பேரை ஏ. முக்குளம் போலீஸார் தேடி  வருகின்றனர்.
 விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள பிள்ளையார்குளத்தை சேர்ந்த  ஈஸ்வரிக்கும், கல்விமடையை சேர்ந்த செந்தில் குமாருக்கும் புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. அதன்  பின்னர், மணமக்கள் அன்றைய தினம் இரவு பிள்ளையார் குளத்தில் உள்ள மணப்பெண்ணின் உறவினரான தாய்மாமன் முருகவேல் (31) வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த  செந்தில்குமார்(24), ஆறுமுகம்(24), முத்து (19), கோபி(21) உள்ளிட்ட 7 பேர் மணப் பெண், அவரது தங்கை ஆகியோரை செல்லிடப்பேசியில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதை, கண்ட முருகவேல் அவர்களை தடுத்து கண்டித்துள்ளார். அதில் ஏற்பட்ட வாய்  தகராறில் 7 பேரும் சேர்ந்து கட்டையால் முருகவேலை தாக்கியுள்ளனர். 
இதில் படுகாயமடைந்த முருகவேல்  மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 
இது குறித்து ஏ.  முக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 7 பேரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.