விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் புறவழிச்சாலைப் பகுதியில் விபத்துகளைத் தடுக்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை நகரின் புறநகர்ப்பகுதியான காந்தி நகர் வழியாக புறவழிச்சாலையான மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலை செல்கிறது. இச்சாலையில் ரயில்வே மேம்பாலம் ஒன்று உள்ளது.
இந்நிலையில் இந்த ரயில்வே மேம்பாலம் அருகில் எம்.தொட்டியான்குளம் சாலைப்பிரிவில், மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையை குறுக்காகக் கடக்க முயலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்ந்து வந்தது.
இதனைத்தொடர்ந்து இப்பகுதியில் சாலையைக் கடக்கத் தடை செய்து, போக்குவரத்துப் போலீஸார் வேலி அமைத்தனர். ஆனால் சில மாதங்களில் இந்த வேலி மீண்டும் திறக்கப்பட்டது. எனவே மீண்டும் இச்சாலையில் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சாலையைத் இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் மணிமாறன், கார் மோதியதில் உயிரிழந்தார். அதனால் இப்பகுதியில் விபத்து எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் சபாநாயகர் ஜெ. சிவசண்முகம் பிள்ளை வரலாறு

பொள்ளாச்சி அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி
முதல்வர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்ற சீமான்!
கண்டனத்தை ஈர்க்கும் பிரதமர் மோடியின் பேச்சு!
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
