விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் குடியிருப்பில் புதிய நிழற்குடை அமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 32 ஆவது வார்டில் உள்ள ராமசாமிபுரம் குடியிருப்பு பந்தல்குடி பிரதானச்சாலையில் உள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தாத நிலையில், நிழற்குடை இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது. அதனால் சேதமடைந்த நிழற்குடையை அகற்றிவிட்டு, இங்கு புதிய நிழற்குடை அமைக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








