கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

ராஜபாளையம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கொத்தனார் கைது

ராஜபாளையம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொத்தனாரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 

Updated On :26 பிப்ரவரி 2019, 2:12 am IST

ராஜபாளையம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொத்தனாரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 
ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த மாணவி அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் பிச்சைமாரி (43). இவர் கொத்தனார். சம்பள கணக்கு பார்க்க உதவிக்கு வர வேண்டுமெனக் கூறி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து பிச்சைமாரியை  போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.