ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மக்காச் சோள விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி காத்திருப்புப் போராட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் படைப்புழுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம்

Updated On :23 ஜனவரி 2019, 7:42 am IST

விருதுநகர் மாவட்டத்தில் படைப்புழுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நடைபெற்ற இப்போரட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் விஜயமுருகன், மாவட்டச் செயலாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர். அப்போது, விருதுநகர் மாவட்டத்தில் அமெரிக்கப் படைப் புழுக்கள் தாக்குதலால் 40 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச் சோளப் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விதையை விற்பனை செய்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
 அதன் பின்னர், நிவாரணத் தொகையை விரைந்து வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.