நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கோயில் பட்டர்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் பணிபுரியும் பட்டாச்சாரியர்கள் மற்றும்

Updated On :23 ஜனவரி 2019, 7:45 am IST

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் பணிபுரியும் பட்டாச்சாரியர்கள் மற்றும் பரிசாரர்களுக்கு 41 நாள்கள் புத்தொளி பயிற்சி முகாம் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயிலில் திங்கள்கிழமை தொடங்கியது. 
 இந்து சமய அறநிலையத் துறை சரக ஆய்வாளர் பாண்டியன் பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்தார். 
  ரா.பாலாஜி பட்டர், வேதபிரான்பட்டர் அனந்தராமகிருஷ்ணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். 
  பயிற்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் உள்ள கோயிலிகளைச் சேர்ந்த பட்டாச்சாரியர்கள் மற்றும் பரிசாரர்கள் கலந்து கொண்டுள்ளனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தக்கார் தி.ரவிச்சந்திரன் செய்துள்ளார். செயல் அலுவலர் அ.இளங்கோவன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.