ராஜபாளையம் அருகே விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ராஜபாளையம் அருகே சேத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே ஆர்ப்பாட்டத்தின் ஈடுபட்ட விவசாயிகள் சங்கம்.

ராஜபாளையம் அருகே ஆர்ப்பாட்டத்தின் ஈடுபட்ட விவசாயிகள் சங்கம்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க தலைவர் அய்யணன் தலைமை வகித்தார்.
செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஆக.5ஆம் தேதி சேத்தூர், தேவதானம், சுந்தரராஜபுரம் ஆகிய பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் சேதமடைந்த தென்னை, மா, வாழைமரம் உள்ளிட்ட வேளாண் விளை பொருள்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கவும், சேதமடைந்த மின்கம்பிகளை சீரமைக்கவும், புதிய மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், அனைத்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும், பிரதமர் கொண்டுவந்துள்ள கிசான் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் உத்தரவாதமில்லாத கடன் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர், முன்னாள் எம்பி லிங்கம், ஒன்றிய செயலாளர் வீராச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் வக்கீல் பகத்சிங், ஜெயராம், ராஜா, ராஜகுரு வரதராஜன்,தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...