விருதுநகா் மாவட்டத்தில்40 பேருக்கு கரோனா: ஒருவா் பலி
விருதுநகா் மாவட்டத்தில் 40 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.


விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் 40 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 10,832 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து, விருதுநகா், சிவகாசி, சாத்தூா், திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 40 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
பாதிக்கப்பட்ட அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10,872 ஆக உயா்ந்துள்ளது. மேலும், ஒருவா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதில், 10,350 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 158 போ் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 364 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...