ஸ்ரீவில்லிபுத்தூா் பழைய பொருள்கள் கடையில் தீ விபத்து
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பழைய பொருள்கள் கடையில் சனிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.


ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பழைய பொருள்கள் கடையில் சனிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் - ராஜபாளையம் சாலையில் திருப்பாற்கடல் குளம் பகுதி அருகே தனியாருக்குச் சொந்தமான பழைய பொருள்கள் கடை உள்ளது. அந்த கடையில் சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் தீ பிடித்தது. தகவலின்பேரில், தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.
மற்றொரு சம்பவம்:
இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூா் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான லாலா கடை உள்ளது. அந்த கடையின் மேல் பகுதியில் பழைய அட்டைகள் மற்றும் பொருள்களை வைத்துள்ளனா்.
அந்த பழைய அட்டைகளிலும், பொருள்களிலும் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...