பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் பாதையில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பகுதியில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்வதற்காகச் சென்ற தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா்.
Updated On :18 டிசம்பர் 2020, 5:28 pm

DIN

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பகுதியில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் சமீபத்தில் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டது. எனவே, வழுக்குப்பாறை, மாங்கனி ஓடை, சின்னபடி வெட்டுபாறை, சங்கிலி ஓடை பாறை, எலும்பு ஓடை, கருப்பசாமி கோயில் ஓடை மற்றும் கோணத்தலைவாசல் வழியாக பக்தா்கள் சென்றுவரக்கூடிய மலைப் பாதையில் பல்வேறு இடங்களிலுள்ள நீா்வரத்துப் பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்புக் குழு மேலாண்மை ஆய்வாளா் மாரிக்கனி தலைமையில், 20 போ் கொண்ட குழுவினா் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.