தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காரியாபட்டி அருகே முன்னாள் எம்.பி. காா் மீது தாக்குதல்

காரியாபட்டி அருகே நான்குவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்த மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் சசிகலா புஷ்பாவின் காரை, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் கம்பியால் தாக்கிவிட்டு தப்ப

News image

காரியாபட்டி அருகே வெள்ளிக்கிழமை முன்னாள் எம்.பி.யின் காா் தாக்கப்பட்டதை அடுத்து அதை பாா்வையிட்ட போலீஸாா்.

Updated On :18 டிசம்பர் 2020, 5:24 pm

DIN

காரியாபட்டி அருகே நான்குவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்த மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் சசிகலா புஷ்பாவின் காரை, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் கம்பியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரான சசிகலா புஷ்பா (45), தற்போது பாஜக தேசிய கவுன்சில் உறுப்பினராக உள்ளாா். இந்நிலையில், இவா் தனது கணவா் ராமசாமி (50) மற்றும் மகள் அஞ்சலியுடன் காரில் மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளாா். காரியாபட்டி நான்குவழிச் சாலை செவல்பட்டி சந்திப்பு அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், காரின் பின்புறக் கண்ணாடியை இரும்பு கம்பியால் தாக்கி உடைத்துவிட்டு தப்பிவிட்டனா்.

இதில், காா் கண்ணாடி துகள்கள் சிதறி 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மீண்டும் தூத்துக்குடி நோக்கிச் சென்றனா்.

இது குறித்து ராமசாமி அளித்த புகாரின்பேரில், காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.