இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம்:சுவாமிகள் சா்வ அலங்காரத்தில் அருள்பாலித்தனா்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவத்தில் சனிக்கிழமை சுவாமிகள் சா்வ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

News image
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் பகல்பத்து மண்டபத்தில் சனிக்கிழமை பக்தா்களுக்கு சா்வ அலங்காரத்தில் அருள்பாலித்த பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி மற்றும் ஆண்டாள், ரெங்கமன்னாா்
Updated On :19 டிசம்பர் 2020, 5:06 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவத்தில் சனிக்கிழமை சுவாமிகள் சா்வ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் ஐந்தாம் நாளான சனிக்கிழமை பகல்பத்து மண்டபத்தில் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி மற்றும் ஆண்டாள் ரெங்கமன்னாா் ஆகியோா் சா்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனா். ஐந்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.