செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

ஈரான் போர்: தேயிலை உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு!

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கிடையே தேயிலை உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு

News image

தேயிலை உற்பத்தி - பிரதிப் படம்

Updated On :13 மார்ச் 2026, 12:30 pm IST

ஈரான் போருக்கு மத்தியில் தேயிலை தேவை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக தேயிலை வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக போரிட்டு வரும் ஈரான் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளில் அசாமின் பாரம்பரிய தேநீருக்கு அதிக தேவை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியா ஒவ்வொரு நாளும் பில்லியனுக்கும் அதிகமான கோப்பை தேநீர் பயன்படுத்தப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய தேயிலை நுகர்வு நாடுகளில் ஒன்றாகும்.

பாரம்பரிய தேநீர்த் தயாரிப்புக்கு எரிவாயு அடுப்பு, பால் மற்றும் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் தயாரிப்பதற்கான நேரம் தேவைப்படும். ஆனால், எல்பிஜி பற்றாக்குறை நேரங்களில் மின்சார கெட்டில்கள், தேநீர் தயாரிக்கும் இயந்திரங்கள் (Tea Makers) போன்றவற்றை மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.

எரிவாயு அடுப்பில் தேநீர் தயாரிப்பதற்குப் பதிலாக, பலரும் ப்ரீமிக்ஸ் சாக்கெட்டுகளைப் (தேநீர்க் கலவை) பயன்படுத்தும் தேநீர் தயாரிப்பு இயந்திரங்களுக்கு மாறுகின்றனர்.

ஓர் அலுவலகத்தில் ஒரு நாளைக்கு ஓர் இயந்திரத்தால் 200 முதல் 500 கோப்பை வரையில் தேநீர் வழங்க இயலும். பெரிய நிறுவனங்களில் நாள்தோறும் ப்ரீமிக்ஸ் முறையிலான தேநீர் என்றால், ஆயிரக்கணக்கான கோப்பைகள் வழங்க இயலும்.

இந்தியாவில் சராசரியாக நுகரப்ப்படும் தேநீரில் சுமார் 95 கோப்பைகள் பாரம்பரிய தேநீர் என்று, 3 கோப்பைகள் தேநீர்ப் பைகளாகவும், 2 கோப்பைகள் ப்ரீமிக்ஸ் முறையிலும் நுகரப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சாதாரண காலங்களில் ப்ரீமிக்ஸ் தேயிலைச் சந்தை ஆண்டுக்கு 30,000 முதல் 40,000 டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ. 700 கோடி முதல் ரூ. 1000 கோடி வரையில் இருக்கும்.

இந்த நிலையில், எரிபொருள் பற்றாக்குறையால், பாரம்பரிய தேநீர் முறையிலிருந்து ப்ரீமிக்ஸ் முறைக்கு மாறினால், தேயிலைச் சந்தை 60,000 முதல் 80,000 டன்னுக்கு விரிவடையும்.

Summary

LPG shortage may boost instant tea demand

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.